குர்ஆன் 25:1 — சட்டப்புத்தகம்
தன் அடியாருக்கு, அவர் முழு உலகிற்கும் ஓர் எச்சரிக்கை செய்பவராகப் பணியாற்றுவதற் காக, இந்தச் சட்டப்புத்தகத்தை வெளிப் படுத்திய அந்த ஒருவர், பாக்கியம் மிக்கவர்.
[25:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[25:2] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் உரிய ஒருவர். ஒருபோதும் அவர் ஒரு மகனைக் கொண்டிருக்கவில்லை, அன்றியும் ஆட்சியதிகாரத்தில் எந்தப் பங்குதாரர்களும் அவருக்கு இல்லை. அவர் ஒவ்வொன்றையும் மிகச் சரியான அளவில் படைத்தார்; ஒவ்வொன்றையும் அவர் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டார்.*