Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:5 — சட்டப்புத்தகம்

அத்துடன் அவர்கள், “அவர் எழுதிக் கொண்ட கடந்த காலக் கட்டுக்கதைகள்; அவை அவருக்கு இரவும் பகலும் எடுத்துக் கூறப் பட்டன”* என்றும் கூறினார்கள்.

[25:4] நம்ப மறுப்பவர்கள், “இது மற்ற சில மனிதர்களின் உதவியுடன், அவர் உருவாக்கி கொண்ட ஓர் இட்டுக் கட்டலேயாகும்” என்று கூறினார்கள். அவர்கள் ஓர் இறை நிந்தனையையும் மேலும் ஒரு பொய்மையையும் கூறி விட்டனர்.

[25:6] “வானங்கள் மற்றும் பூமியின் இரகசியத்தை* அறிந்த ஒருவரிடமிருந்து இது வெளிப்படுத்தப் பட்டுள்ளது. அவர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்” என்று கூறுவீராக.