குர்ஆன் 25:7 — சட்டப்புத்தகம்
மேலும் அவர்கள் கூறினர், “இந்தத் தூதர் உணவு உட்கொண்டும் அங்காடிகளில் நடந்து கொண்டும் இருப்பது எப்படி? அவருடன் ஒரு பிரச்சாரகராகப் பணிபுரிய ஒரு வானவர் மட்டும் அவருடன் இறங்கி வர முடிந்தால்!”
[25:6] “வானங்கள் மற்றும் பூமியின் இரகசியத்தை* அறிந்த ஒருவரிடமிருந்து இது வெளிப்படுத்தப் பட்டுள்ளது. அவர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்” என்று கூறுவீராக.
[25:8] அல்லது, “ஒரு புதையல் மட்டும் அவருக்குக் கொடுக்கப்பட்டால்!” அல்லது, “அவர் ஒரு தோட்டத்தை மட்டும் பெற்றிருந்து அதிலிருந்து அவர் உண்ணுவாரானால்!” வரம்பு மீறுபவர்கள் மேலும், “நீங்கள் சூன்யம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள்” என்றும் கூறினார்கள்.