குர்ஆன் 27:24 — எறும்பு
“அவளும், அவளுடைய சமூகத்தாரும், கடவுள்-ஐ விடுத்து சூரியன் முன் சிரம் பணிந்து கொண்டிருக்க நான் கண்டேன். சாத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுடைய கண்களில் அழகானதாக்கி விட்டான், மேலும் அவர்களைப் பாதையிலிருந்து விரட்டி விட்டான்; அதன் விளைவாக, அவர்கள் வழிகாட்டப் பட்டவர்களாக இல்லை.”
[27:23] “ஒவ்வொரு பொருளையும் கொண்டு அருள் பாலிக்கப்பட்ட, மேலும் பிரம்மாண்டமானதொரு மாளிகையைக் கொண்ட, ஒரு பெண்மணி அவர்களை ஆட்சிசெய்ய நான் கண்டேன்.
[27:25] அவர்கள் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்து மர்மங்களையும் வெளிப்படுத்துகின்ற ஒருவரும், மேலும் நீங்கள் மறைத்து வைக்கும் ஒவ்வொன்றையும், நீங்கள் அறிவிக்கும் ஒவ்வொன்றையும் அறிந்திருக்கும் ஒருவருமாகிய கடவுள்-ன் முன் சிரம்பணிந்திருக்க வேண்டும்.