Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:23 — எறும்பு

“ஒவ்வொரு பொருளையும் கொண்டு அருள் பாலிக்கப்பட்ட, மேலும் பிரம்மாண்டமானதொரு மாளிகையைக் கொண்ட, ஒரு பெண்மணி அவர்களை ஆட்சிசெய்ய நான் கண்டேன்.

[27:22] அவர் நீண்ட நேரம் காத்திருக்கவில்லை. (ஹூப்போ), “நீங்கள் பெற்றிராத செய்தி என்னிடம் இருக்கின்றது. ஷீபாவிலிருந்து, சில முக்கியமான தகவல்களை உங்களுக்கு நான் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறியது.

[27:24] “அவளும், அவளுடைய சமூகத்தாரும், கடவுள்-ஐ விடுத்து சூரியன் முன் சிரம் பணிந்து கொண்டிருக்க நான் கண்டேன். சாத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுடைய கண்களில் அழகானதாக்கி விட்டான், மேலும் அவர்களைப் பாதையிலிருந்து விரட்டி விட்டான்; அதன் விளைவாக, அவர்கள் வழிகாட்டப் பட்டவர்களாக இல்லை.”