குர்ஆன் 27:61 — எறும்பு
வசிக்கத்தக்கதாக பூமியை ஆக்கி, அதனூடே ஆறுகளை ஓடச் செய்து, அதன் மீது மலைகளை அமைத்ததுடன், மேலும் நீர்ப்பரப்புகள் இரண்டிற்குமிடையே ஒரு தடையை உருவாக்கிய அந்த ஒருவர் யார்? கடவுள்-உடன் மற்றொரு தெய்வமா? உண்மையில், அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.
[27:60] வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த ஒருவர் யார்? எதன் மூலம் எழில் நிறைந்த தோட்டங்களை நாம் உருவாக்குகின்றோமோ, அந்த தண்ணீரை விண்ணிலிருந்து உங்களுக்கு இறக்கி அனுப்புகின்ற அந்த ஒருவர் யார்- அதன் மரங்களை நீங்கள் உற்பத்தி செய்ய சாத்தியமில்லையே? கடவுள்-உடன் மற்றொரு தெய்வமா? உண்மையில், அவர்கள் வழி தவறிச் சென்று விட்ட மக்களாகவே இருக்கின்றனர்.
[27:62] விரக்தியடைந்து அவரை அழைப்பவர்களை காப்பாற்றி, இன்னலை இலகுவாக்கி, மேலும் பூமிக்கு உங்களை வாரிசுகளாக ஆக்கிய அந்த ஒருவர் யார்? கடவுள்-உடன் மற்றொரு தெய்வமா? அரிதாகவே நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றீர்கள்.