Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:62 — எறும்பு

விரக்தியடைந்து அவரை அழைப்பவர்களை காப்பாற்றி, இன்னலை இலகுவாக்கி, மேலும் பூமிக்கு உங்களை வாரிசுகளாக ஆக்கிய அந்த ஒருவர் யார்? கடவுள்-உடன் மற்றொரு தெய்வமா? அரிதாகவே நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றீர்கள்.

[27:61] வசிக்கத்தக்கதாக பூமியை ஆக்கி, அதனூடே ஆறுகளை ஓடச் செய்து, அதன் மீது மலைகளை அமைத்ததுடன், மேலும் நீர்ப்பரப்புகள் இரண்டிற்குமிடையே ஒரு தடையை உருவாக்கிய அந்த ஒருவர் யார்? கடவுள்-உடன் மற்றொரு தெய்வமா? உண்மையில், அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.

[27:63] நிலத்திலும் மற்றும் கடலிலும் உள்ள இருள்களில் உங்களை வழிநடத்துகின்ற ஒருவர் யார்? அவருடைய கருணையின் அடையாளமாக, நற்செய்திகளுடன் காற்று களை அனுப்புகின்ற ஒருவர் யார்? கடவுள்-உடன் மற்றொரு தெய்வமா? பங்குதாரர் எவரையும் கொண்டிருப்பதற்கெல்லாம் மேலாகக், கடவுள் மிகவும் உயர்வானவர்.