குர்ஆன் 27:63 — எறும்பு
நிலத்திலும் மற்றும் கடலிலும் உள்ள இருள்களில் உங்களை வழிநடத்துகின்ற ஒருவர் யார்? அவருடைய கருணையின் அடையாளமாக, நற்செய்திகளுடன் காற்று களை அனுப்புகின்ற ஒருவர் யார்? கடவுள்-உடன் மற்றொரு தெய்வமா? பங்குதாரர் எவரையும் கொண்டிருப்பதற்கெல்லாம் மேலாகக், கடவுள் மிகவும் உயர்வானவர்.
[27:62] விரக்தியடைந்து அவரை அழைப்பவர்களை காப்பாற்றி, இன்னலை இலகுவாக்கி, மேலும் பூமிக்கு உங்களை வாரிசுகளாக ஆக்கிய அந்த ஒருவர் யார்? கடவுள்-உடன் மற்றொரு தெய்வமா? அரிதாகவே நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றீர்கள்.
[27:64] படைப்பைத் துவக்கி, பின்னர் அதனை மீண்டும் செய்கின்ற ஒருவர் யார்? வானத்தி லிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு வழங்குகின்ற ஒருவர் யார்? கடவுள்-உடன் மற்றொரு தெய்வமா? “நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால், உங்களுடைய சான்றினை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறுவீராக.