குர்ஆன் 27:64 — எறும்பு
படைப்பைத் துவக்கி, பின்னர் அதனை மீண்டும் செய்கின்ற ஒருவர் யார்? வானத்தி லிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு வழங்குகின்ற ஒருவர் யார்? கடவுள்-உடன் மற்றொரு தெய்வமா? “நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால், உங்களுடைய சான்றினை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறுவீராக.
[27:63] நிலத்திலும் மற்றும் கடலிலும் உள்ள இருள்களில் உங்களை வழிநடத்துகின்ற ஒருவர் யார்? அவருடைய கருணையின் அடையாளமாக, நற்செய்திகளுடன் காற்று களை அனுப்புகின்ற ஒருவர் யார்? கடவுள்-உடன் மற்றொரு தெய்வமா? பங்குதாரர் எவரையும் கொண்டிருப்பதற்கெல்லாம் மேலாகக், கடவுள் மிகவும் உயர்வானவர்.
[27:65] “கடவுள்-ஐத் தவிர வானங்கள் மற்றும் பூமியில் உள்ள எவர் ஒருவருக்கும் எதிர்காலம் தெரியாது. எப்படி அல்லது எப்பொழுது அவர் கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவார்கள் என்பதைக்கூட அவர்கள் உணர மாட்டார்கள்” என்று கூறுவீராக.