குர்ஆன் 27:65 — எறும்பு
“கடவுள்-ஐத் தவிர வானங்கள் மற்றும் பூமியில் உள்ள எவர் ஒருவருக்கும் எதிர்காலம் தெரியாது. எப்படி அல்லது எப்பொழுது அவர் கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவார்கள் என்பதைக்கூட அவர்கள் உணர மாட்டார்கள்” என்று கூறுவீராக.
[27:64] படைப்பைத் துவக்கி, பின்னர் அதனை மீண்டும் செய்கின்ற ஒருவர் யார்? வானத்தி லிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு வழங்குகின்ற ஒருவர் யார்? கடவுள்-உடன் மற்றொரு தெய்வமா? “நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால், உங்களுடைய சான்றினை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறுவீராக.
[27:66] உண்மையில், மறுவுலகைக் குறித்து அவர் களுடைய அறிவு குழம்பி விட்டது. உண்மை யில், அதைப்பற்றி அவர்கள் சந்தேகங்களைத் தாங்கி இருக்கின்றனர். உண்மையில், அவர்கள் அதில் முற்றிலும் கவனமற்று இருக்கின்றனர்.