குர்ஆன் 27:66 — எறும்பு
உண்மையில், மறுவுலகைக் குறித்து அவர் களுடைய அறிவு குழம்பி விட்டது. உண்மை யில், அதைப்பற்றி அவர்கள் சந்தேகங்களைத் தாங்கி இருக்கின்றனர். உண்மையில், அவர்கள் அதில் முற்றிலும் கவனமற்று இருக்கின்றனர்.
[27:65] “கடவுள்-ஐத் தவிர வானங்கள் மற்றும் பூமியில் உள்ள எவர் ஒருவருக்கும் எதிர்காலம் தெரியாது. எப்படி அல்லது எப்பொழுது அவர் கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவார்கள் என்பதைக்கூட அவர்கள் உணர மாட்டார்கள்” என்று கூறுவீராக.
[27:67] நம்ப மறுத்தவர்கள் கூறினர், “நாங்களும் எங்களுடைய பெற்றோரும் கூட, புழுதியாக மாறிய பின்னர், நாங்கள் வெளிக்கொண்டு வரப்படுவோமா?