குர்ஆன் 28:13 — சரித்திரம்
இவ்விதமாக, அவருடைய தாயாரிடம், அவரை மகிழ்வடையச் செய்யவும், அவருடைய கவலை களைப் போக்கவும், மேலும் கடவுள்-ன் வாக்குறுதி சத்தியம்தான் என்பதை அவர் அறிந்து கொள்ளும்படி செய்யவும் அவரை மீண்டும் தந்தோம். ஆயினும், அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
[28:12] செவிலித்தாய்கள் யாவரையும் ஏற்றுக் கொள் வதை விட்டும் நாம் அவரைத் தடுத்தோம். (அவருடைய சகோதரி) பின்னர், “உங்களுக்காக அவரை வளர்த்தெடுக்கவும், மேலும் அவர் மீது நல்ல கவனம் எடுத்துக் கொள்ளவும் கூடிய ஒரு குடும்பத்தை என்னால் உங்களுக்குக் காட்ட இயலும்” என்று கூறினாள்.
[28:14] அவர் பக்குவமும் பலமும் அடைந்த போது, ஞானத்தையும் மற்றும் அறிவையும் கொண்டு அவருக்கு நாம் கொடையளித்தோம். இவ்வித மாகவே நன்னெறியாளர்களுக்கு நாம் வெகுமதியளிக்கின்றோம்.