குர்ஆன் 28:35 — சரித்திரம்
அவர், “உம்முடைய சகோதரருடன் உம்மை நாம் பலப்படுத்துவோம், மேலும் உங்கள் இருவருக்கும் தெளிவான அதிகாரத்தை நாம் வழங்குவோம். இவ்விதமாக, உங்கள் இருவரில் எவர் ஒருவரையும் அவர்களால் தொடக்கூட முடியாது. நமது அற்புதங்களுடன், நீங்கள் இருவரும், உங்களைப் பின்பற்றியவர்களுடன் சேர்ந்து, வெற்றியாளர்களாக இருப்பீர்கள்” என்று கூறினார்.
[28:34] “இன்னும், என்னை விட என் சகோதரர் ஆரோன் பேச்சுத்திறன் அதிகம் உடையவராக இருக்கின்றார். என்னை உறுதிப்படுத்தவும், மேலும் பலப்படுத்தவும் ஓர் உதவியாளராக அவரை என்னுடன் அனுப்புவீராக. அவர்கள் என்னை நம்ப மறுத்துவிடுவார்களோ என்று நான் அஞ்சுகின்றேன்.”
[28:36] தெளிவான, மற்றும் ஆழ்ந்த நமது சான்றுகளுடன் மோஸஸ் அவர்களிடம் சென்ற பொழுது, அவர்கள், “இது இட்டுக்கட்டப்பட்ட மாயாஜாலமாகும். நம்முடைய பண்டைய மூதாதையர்களிடமிருந்து இதனை நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை” என்று கூறினார்கள்.