Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:36 — சரித்திரம்

தெளிவான, மற்றும் ஆழ்ந்த நமது சான்றுகளுடன் மோஸஸ் அவர்களிடம் சென்ற பொழுது, அவர்கள், “இது இட்டுக்கட்டப்பட்ட மாயாஜாலமாகும். நம்முடைய பண்டைய மூதாதையர்களிடமிருந்து இதனை நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை” என்று கூறினார்கள்.

[28:35] அவர், “உம்முடைய சகோதரருடன் உம்மை நாம் பலப்படுத்துவோம், மேலும் உங்கள் இருவருக்கும் தெளிவான அதிகாரத்தை நாம் வழங்குவோம். இவ்விதமாக, உங்கள் இருவரில் எவர் ஒருவரையும் அவர்களால் தொடக்கூட முடியாது. நமது அற்புதங்களுடன், நீங்கள் இருவரும், உங்களைப் பின்பற்றியவர்களுடன் சேர்ந்து, வெற்றியாளர்களாக இருப்பீர்கள்” என்று கூறினார்.

[28:37] மோஸஸ், “என் இரட்சகர், அவரிடமிருந்து வழிகாட்டலைக் கொண்டு வந்திருப்பது யாரென்பதையும், மேலும் இறுதி வெற்றியாளர் களாக இருக்கப்போவது யாரென்பதையும் நன்கறிவார். நிச்சயமாக, வரம்பு மீறுபவர்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள்” என்று கூறினார்.