குர்ஆன் 28:37 — சரித்திரம்
மோஸஸ், “என் இரட்சகர், அவரிடமிருந்து வழிகாட்டலைக் கொண்டு வந்திருப்பது யாரென்பதையும், மேலும் இறுதி வெற்றியாளர் களாக இருக்கப்போவது யாரென்பதையும் நன்கறிவார். நிச்சயமாக, வரம்பு மீறுபவர்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள்” என்று கூறினார்.
[28:36] தெளிவான, மற்றும் ஆழ்ந்த நமது சான்றுகளுடன் மோஸஸ் அவர்களிடம் சென்ற பொழுது, அவர்கள், “இது இட்டுக்கட்டப்பட்ட மாயாஜாலமாகும். நம்முடைய பண்டைய மூதாதையர்களிடமிருந்து இதனை நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை” என்று கூறினார்கள்.
[28:38] ஃபேரோ, “என் பிரதானிகளே, என்னை அன்றி உங்களுக்கு வேறு எந்தத் தெய்வத்தையும் நான் அறிந்திருக்கவில்லை. ஆகையால், ஹாமானே, மோஸஸின் தெய்வத்தை நான் ஒரு நோட்டமிடுவதற்காக, ஒரு கோபுரத்தை கட்டுவதற்கு, சூளையைப் பற்றவைப்பாயாக. அவர் ஒரு பொய்யர் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்” என்று கூறினான்.