குர்ஆன் 28:38 — சரித்திரம்
ஃபேரோ, “என் பிரதானிகளே, என்னை அன்றி உங்களுக்கு வேறு எந்தத் தெய்வத்தையும் நான் அறிந்திருக்கவில்லை. ஆகையால், ஹாமானே, மோஸஸின் தெய்வத்தை நான் ஒரு நோட்டமிடுவதற்காக, ஒரு கோபுரத்தை கட்டுவதற்கு, சூளையைப் பற்றவைப்பாயாக. அவர் ஒரு பொய்யர் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்” என்று கூறினான்.
[28:37] மோஸஸ், “என் இரட்சகர், அவரிடமிருந்து வழிகாட்டலைக் கொண்டு வந்திருப்பது யாரென்பதையும், மேலும் இறுதி வெற்றியாளர் களாக இருக்கப்போவது யாரென்பதையும் நன்கறிவார். நிச்சயமாக, வரம்பு மீறுபவர்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள்” என்று கூறினார்.
[28:39] இவ்விதமாக, அவனும், அவனுடைய படை யினரும் பூமியின் மீது, எவ்வித நியாயமுமின்றி தொடர்ந்து ஆணவம் கொண்டனர், மேலும் நம்மிடம் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள் என்று நினைத்தனர்.