Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:39 — சரித்திரம்

இவ்விதமாக, அவனும், அவனுடைய படை யினரும் பூமியின் மீது, எவ்வித நியாயமுமின்றி தொடர்ந்து ஆணவம் கொண்டனர், மேலும் நம்மிடம் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள் என்று நினைத்தனர்.

[28:38] ஃபேரோ, “என் பிரதானிகளே, என்னை அன்றி உங்களுக்கு வேறு எந்தத் தெய்வத்தையும் நான் அறிந்திருக்கவில்லை. ஆகையால், ஹாமானே, மோஸஸின் தெய்வத்தை நான் ஒரு நோட்டமிடுவதற்காக, ஒரு கோபுரத்தை கட்டுவதற்கு, சூளையைப் பற்றவைப்பாயாக. அவர் ஒரு பொய்யர் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

[28:40] அதன் விளைவாக, அவர்களைக் கடலுக்குள் எறிந்ததன் மூலம், அவனையும் அவனுடைய படைகளையும் நாம் தண்டித்தோம். வரம்புமீறு பவர்களுக்கான பின்விளைவுகளைக் கவனித்துப் பார்ப்பீராக.