குர்ஆன் 28:40 — சரித்திரம்
அதன் விளைவாக, அவர்களைக் கடலுக்குள் எறிந்ததன் மூலம், அவனையும் அவனுடைய படைகளையும் நாம் தண்டித்தோம். வரம்புமீறு பவர்களுக்கான பின்விளைவுகளைக் கவனித்துப் பார்ப்பீராக.
[28:39] இவ்விதமாக, அவனும், அவனுடைய படை யினரும் பூமியின் மீது, எவ்வித நியாயமுமின்றி தொடர்ந்து ஆணவம் கொண்டனர், மேலும் நம்மிடம் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள் என்று நினைத்தனர்.
[28:41] தங்களுடைய சமூகத்தாரை நரகத்திற்கு வழிநடத்திய இமாம்களாக அவர்களை நாம் ஆக்கினோம். இன்னும், மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாள் அன்று, அவர்களுக்கு எந்த உதவியும் இருக்காது.