Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:37 — சிலந்திப் பூச்சி

அவர்கள் அவரை நம்ப மறுத்தனர், மேலும் அதன்விளைவாக, நில நடுக்கம் அவர்களை அழித்தது; காலையில் அவர்கள் தங்களுடைய வீடுகளில் இறந்தவர்களாக விட்டு விடப்பட்டனர்.

[29:36] மித்யனுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை நாம் அனுப்பினோம். அவர், “என் சமூகத்தாரே, நீங்கள் கடவுள்-ஐ வழிபடவும் இறுதி நாளைத் தேடவும் வேண்டும், மேலும் சீர்குலைக்கும் முகமாக பூமியில் சுற்றித் திரியாதீர்கள்” என்று கூறினார்.

[29:38] அதைப்போலவே, ‘ஆது மற்றும் தமூது (ஆகி யோரும் அழிக்கப்பட்டனர்). அவர்களுடைய அழிவுச்சின்னங்களின் மூலமாக இது உங்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. சாத்தான் அவர்களுடைய காரியங்களை அவர்களுடைய கண்களில் அழகானதாக ஆக்கிவிட்டான், மேலும் கண்களுடையவர் களாக அவர்கள் இருந்த போதிலும், பாதையை விட்டு அவர்களைத் திருப்பிவிட்டான்.