குர்ஆன் 29:68 — சிலந்திப் பூச்சி
وَمَن أَظلَمُ مِمَّنِ افتَرىٰ عَلَى اللَّهِ كَذِبًا أَو كَذَّبَ بِالحَقِّ لَمّا جاءَهُ ۚ أَلَيسَ فى جَهَنَّمَ مَثوًى لِلكٰفِرينَ
பொய்களை இட்டுக்கட்டி மேலும் அவற்றைக் கடவுள் மீது சாட்டுகின்ற, அல்லது சத்தியம் அவனிடம் வரும் போது அதனை ஏற்க மறுக்கின்ற ஒருவனை விட மிகத்தீயவன் யார்? நம்ப மறுப்பவர்களுக்கு நரகம் ஒரு நியாயமான தண்டனைதான் அல்லவா?
[29:67] நம்மால் பாதுகாப்பாக ஆக்கப்பட்டதொரு புனிதமான புகலிடத்தை நாம் நிர்மானித் துள்ளோம் என்பதையும், அதே சமயம் அவற்றைச் சுற்றியுள்ள எல்லா மக்களும் தொடர்ந்து ஆபத்தி லிருப்பதையும் அவர்கள் காணவில்லையா? அவ்வாறிருந்தும் அவர்கள் தொடர்ந்து பொய்மையின் மீது நம்பிக்கை கொண்டும், மேலும் கடவுள்-ன் அருட்கொடைகளை ஏற்க மறுத்தும் விடுவார்களா?
[29:69] நமக்காகப் பாடுபடுவோரைப் பொறுத்தவரை, நமது பாதைகளில் நிச்சயமாக நாம் அவர்களை வழிநடத்துவோம். மிகவும் நிச்சயமாக, கடவுள் பக்திமான்களுடன் இருக்கின்றார்.