குர்ஆன் 29:67 — சிலந்திப் பூச்சி
நம்மால் பாதுகாப்பாக ஆக்கப்பட்டதொரு புனிதமான புகலிடத்தை நாம் நிர்மானித் துள்ளோம் என்பதையும், அதே சமயம் அவற்றைச் சுற்றியுள்ள எல்லா மக்களும் தொடர்ந்து ஆபத்தி லிருப்பதையும் அவர்கள் காணவில்லையா? அவ்வாறிருந்தும் அவர்கள் தொடர்ந்து பொய்மையின் மீது நம்பிக்கை கொண்டும், மேலும் கடவுள்-ன் அருட்கொடைகளை ஏற்க மறுத்தும் விடுவார்களா?
[29:66] அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றை அவர்கள் நம்பமறுக்கட்டும், மேலும் அவர்கள் தற்காலிகமாகச் சுகமனுபவிக்கட்டும்; அவர்கள் நிச்சயமாகக் கண்டு கொள்வார்கள்.
[29:68] பொய்களை இட்டுக்கட்டி மேலும் அவற்றைக் கடவுள் மீது சாட்டுகின்ற, அல்லது சத்தியம் அவனிடம் வரும் போது அதனை ஏற்க மறுக்கின்ற ஒருவனை விட மிகத்தீயவன் யார்? நம்ப மறுப்பவர்களுக்கு நரகம் ஒரு நியாயமான தண்டனைதான் அல்லவா?