குர்ஆன் 29:66 — சிலந்திப் பூச்சி
அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றை அவர்கள் நம்பமறுக்கட்டும், மேலும் அவர்கள் தற்காலிகமாகச் சுகமனுபவிக்கட்டும்; அவர்கள் நிச்சயமாகக் கண்டு கொள்வார்கள்.
[29:65] அவர்கள் ஒரு கப்பலில் சவாரி செய்யும்போது, தங்களுடைய பிரார்த்தனைகளை கடவுள்-க்கு அர்ப்பணித்தவர்களாக, அவர்கள் அவரை இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றனர். ஆனால் அவர்களை அவர் காப்பாற்றி கரை சேர்த்தவுடன், அவர்கள் இணைத்தெய்வ வழிபாட்டிற்கு மீண்டும் திரும்பி விடுகின்றனர்.
[29:67] நம்மால் பாதுகாப்பாக ஆக்கப்பட்டதொரு புனிதமான புகலிடத்தை நாம் நிர்மானித் துள்ளோம் என்பதையும், அதே சமயம் அவற்றைச் சுற்றியுள்ள எல்லா மக்களும் தொடர்ந்து ஆபத்தி லிருப்பதையும் அவர்கள் காணவில்லையா? அவ்வாறிருந்தும் அவர்கள் தொடர்ந்து பொய்மையின் மீது நம்பிக்கை கொண்டும், மேலும் கடவுள்-ன் அருட்கொடைகளை ஏற்க மறுத்தும் விடுவார்களா?