குர்ஆன் 3:154 — இம்ரானின் குடும்பத்தினர்
பின்னடைவுக்குப் பிறகு, அவர் உங்கள் மீது அமைதியான உறக்கத்தை இறக்கி வைத்தார், அது உங்களில் சிலரை அமைதிப்படுத்தியது. உங்களில் மற்றவர்கள் சுயநலமாக தங்களைப் பற்றியே கவலைப்பட்டனர். அவர்கள் கடவுளைப் பற்றி சரியானவை அல்லாத எண்ணங்களை வளர்த்துக் கொண்டனர்—அறியாமையின் நாட்களில் அவர்கள் வளர்த்துக் கொண்ட அதே எண்ணங்கள். இவ்விதமாக, அவர்கள் கூறினர், "நம் கையில் ஏதேனும் உள்ளதா?" கூறுங்கள், "எல்லாம் கடவுளின் கையில் உள்ளது." அவர்கள் உங்களுக்கு வெளிப்படுத்தாததை தங்களுக்குள்ளேயே மறைத்து வைத்தனர். அவர்கள் கூறினர், "அது நம் கையில் இருந்திருந்தால், இந்த போரில் நம்மில் எவரும் கொல்லப்பட்டிருக்க மாட்டோம்." கூறுங்கள், "நீங்கள் உங்கள் வீடுகளில் தங்கியிருந்தாலும், கொல்லப்பட விதிக்கப்பட்டவர்கள் தங்கள் மரணப் படுக்கைகளுக்குள் ஊர்ந்து சென்றிருப்பார்கள்." கடவுள் இவ்விதமாக உங்களை சோதிக்கின்றார், உங்கள் உண்மையான நம்பிக்கைகளை வெளிக்கொணர, மேலும் உங்கள் இதயங்களில் உள்ளதை சோதிக்க. கடவுள் உள்ளத்தின் ஆழமான எண்ணங்களை முழுமையாக அறிந்தவர்.
[3:153] உங்களின் பின்னால் இருந்து தூதர் உங்களை அழைத்துக் கொண்டிருந்தபோதும், எவர் ஒருவரையும் கவனிக்காமல் நீங்கள் (போர்ப் பொருட்களின் பால்) விரைந்தோடியதை நினைவு கூருங்கள். அதன் விளைவாக, நீங்கள் இழந்து விட்ட எந்த ஒன்றிற்காகவும் வருந்தக்கூடாது என்பதற்காகவும், அல்லது நீங்கள் அனுபவித்த கஷ்டங்களினால் மிகுந்த வேதனை அடையக் கூடாது என்பதற்காகவும் ஒரு துன்பத்திற்கு மாற்றாக மற்றொன்றை
[3:155] நிச்சயமாக, இரண்டு படைகள் மோதிக் கொண்ட அந்நாளில் உங்களில் புறங்காட்டிச் சென்றவர்கள் சாத்தானால் ஏமாற்றப்பட்டனர். இது அவர்கள் செய்துவிட்ட (தீய) செயல்கள் சிலவற்றை பிரதிபலிக்கின்றது. கடவுள் அவர்களை மன்னித்து விட்டார். கடவுள் மன்னிப்பவர், கருணையாளர்.