Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:162 — இம்ரானின் குடும்பத்தினர்

கடவுள்-ன் திருப்தியைத் தேடும் ஒருவரும், கடவுள்-ன் கோபத்திற்குள்ளாகி மிகத் துன்பகரமான தங்குமிடமான நரகத்தை தன் விதியாக்கிக் கொள்ளும் ஒருவனும் சமமா வார்களா?

[3:161] வேதம் வழங்கப்பட்டவராக இருந்த போதிலும் போரில் கைப்பற்றியப் பொருட்களில் அவருக்குரிய பங்கைத் தவிர அதிகமாக எடுக்க இயலாது. தனக்கு உரிமையுள்ள பங்கை விட அதிகமாக எடுக்கும் எவர் ஒருவரும் அதற்கான பதிலை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் கூற வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அது சம்பாதித்ததற்கேற்ப, சிறிதளவும் அநீதமின்றிக் கொடுக்கப்படும்.

[3:163] அவர்கள் நிச்சயமாக கடவுள்-இடத்தில் வெவ்வேறு அந்தஸ்துகளை அனுபவிப்பார்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் பார்ப்பவராக உள்ளார்.