Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:187 — இம்ரானின் குடும்பத்தினர்

வேதத்தை பெற்றவர்களிடம் கடவுள்: “ நீங்கள் இதனை மக்களுக்கு பிரகடனம் செய்ய வேண்டும், மேலும் ஒருபோதும் இதனை மறைக்கக் கூடாது,” என்று ஓர் உடன்படிக்கை எடுத்துக் கொண்டார். ஆனால் அவர்கள் இதனை தங்கள் முதுகுகளுக்கு பின்னால் எறிந்து அலட்சியம் செய்தனர், மேலும் மலிவானதொரு விலைக்காக அதனை வியாபாரம் செய்தனர். எப்படிப்பட்டதொரு துக்ககரமான வியாபாரம்.

[3:186] உங்களுடைய செல்வம் மற்றும் வாழ்வுகளின் மூலம் நீங்கள் நிச்சயமாகச் சோதிக்கப்படு வீர்கள், மேலும் வேதத்தை பெற்றவர்களிட மிருந்தும், இன்னும் இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களிடமிருந்தும் ஏராளமான நிந்தனையை நீங்கள் செவியுறுவீர்கள். நீங்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் நன்னெறியான தொரு வாழ்வு நடத்தினால், இது உங்களது விசுவாசத்தின் பலத்தை நிரூபிக்கும்.

[3:188] எவர்கள் தங்களுடைய செயல்கள் பற்றி பெருமை பேசிக் கொள்கின்றார்களோ, மேலும் உண்மையிலேயே அவர்கள் செய்திடாத சிலவற்றிற்காக புகழப்பட வேண்டும் என விரும்புகின்றார்களோ, அவர்கள் தண்டனையி லிருந்து தப்பிவிட இயலும் என்று எண்ணிவிட வேண்டாம். அவர்கள் வேதனை மிக்கதொரு தண்டனைக்குள்ளாகிவிட்டனர்.