Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:186 — இம்ரானின் குடும்பத்தினர்

உங்களுடைய செல்வம் மற்றும் வாழ்வுகளின் மூலம் நீங்கள் நிச்சயமாகச் சோதிக்கப்படு வீர்கள், மேலும் வேதத்தை பெற்றவர்களிட மிருந்தும், இன்னும் இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களிடமிருந்தும் ஏராளமான நிந்தனையை நீங்கள் செவியுறுவீர்கள். நீங்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் நன்னெறியான தொரு வாழ்வு நடத்தினால், இது உங்களது விசுவாசத்தின் பலத்தை நிரூபிக்கும்.

[3:185] ஒவ்வொரு நபரும் மரணத்தைச் சுவைப்பார், பின்னர் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் உங்கள் வெகுமதியை நீங்கள் பெறுவீர்கள். எவரொருவர் வெளிப்படையாக நரகத்தினின்றும் தப்பித்து மேலும் சுவனத்தை அடைகின்றாரோ அவர் ஒரு மகத்தான வெற்றியை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்வு ஒரு மாயையே அன்றி அதிகமாக எதுவுமில்லை.

[3:187] வேதத்தை பெற்றவர்களிடம் கடவுள்: “ நீங்கள் இதனை மக்களுக்கு பிரகடனம் செய்ய வேண்டும், மேலும் ஒருபோதும் இதனை மறைக்கக் கூடாது,” என்று ஓர் உடன்படிக்கை எடுத்துக் கொண்டார். ஆனால் அவர்கள் இதனை தங்கள் முதுகுகளுக்கு பின்னால் எறிந்து அலட்சியம் செய்தனர், மேலும் மலிவானதொரு விலைக்காக அதனை வியாபாரம் செய்தனர். எப்படிப்பட்டதொரு துக்ககரமான வியாபாரம்.