குர்ஆன் 3:185 — இம்ரானின் குடும்பத்தினர்
ஒவ்வொரு நபரும் மரணத்தைச் சுவைப்பார், பின்னர் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் உங்கள் வெகுமதியை நீங்கள் பெறுவீர்கள். எவரொருவர் வெளிப்படையாக நரகத்தினின்றும் தப்பித்து மேலும் சுவனத்தை அடைகின்றாரோ அவர் ஒரு மகத்தான வெற்றியை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்வு ஒரு மாயையே அன்றி அதிகமாக எதுவுமில்லை.
[3:184] அவர்கள் உம்மை ஏற்க மறுத்தால், உமக்கு முன் பிருந்த தூதர்கள், சான்றுகள், சங்கீதம், மேலும் ஞானம் உபதேசிக்கும் வேதம் ஆகியவற்றைக் கொண்டு வந்த போதிலும் கூட அவர்கள் நிராகரிக்கப்பட்டார்கள்.
[3:186] உங்களுடைய செல்வம் மற்றும் வாழ்வுகளின் மூலம் நீங்கள் நிச்சயமாகச் சோதிக்கப்படு வீர்கள், மேலும் வேதத்தை பெற்றவர்களிட மிருந்தும், இன்னும் இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களிடமிருந்தும் ஏராளமான நிந்தனையை நீங்கள் செவியுறுவீர்கள். நீங்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் நன்னெறியான தொரு வாழ்வு நடத்தினால், இது உங்களது விசுவாசத்தின் பலத்தை நிரூபிக்கும்.