குர்ஆன் 3:189 — இம்ரானின் குடும்பத்தினர்
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் கடவுள்-க்கே உரியது. கடவுள் சர்வ சக்தியுடையவர்.
[3:188] எவர்கள் தங்களுடைய செயல்கள் பற்றி பெருமை பேசிக் கொள்கின்றார்களோ, மேலும் உண்மையிலேயே அவர்கள் செய்திடாத சிலவற்றிற்காக புகழப்பட வேண்டும் என விரும்புகின்றார்களோ, அவர்கள் தண்டனையி லிருந்து தப்பிவிட இயலும் என்று எண்ணிவிட வேண்டாம். அவர்கள் வேதனை மிக்கதொரு தண்டனைக்குள்ளாகிவிட்டனர்.
[3:190] வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுத்திறன் உடையவர்களுக்கு அத்தாட்சிகள் உள்ளன.