குர்ஆன் 3:98 — இம்ரானின் குடும்பத்தினர்
“வேதத்தைப் பின்பற்றுவோரே, நீங்கள் செய்யும் ஒவ்வொன்றிற்கும் கடவுள் சாட்சியாக இருக்கும் போது, கடவுள்-ன் இந்த வெளிப் பாடுகளை ஏன் நீங்கள் ஏற்க மறுக் கின்றீர்கள்?” என்று கூறுவீராக.
[3:97] அதில் தெளிவான அடையாளங்கள் உள்ளன, அது ஆப்ரஹாமின் இடமாகும். அதில் நுழையும் எவரொருவருக்கும் பாதுகாப்பான வழி வழங்கப்பட வேண்டும். மக்கள் தங்களால் இயலும்போது இந்த புனிதமான இடத்திற்கு, ஹஜ்ஜைக் கடைபிடிப்பது கடவுள்-க்கு செய்ய வேண்டிய கடமை ஆகும். நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, கடவுள்-க்கு எவருடைய தேவையும் இல்லை.
[3:99] “வேதத்தைப் பின்பற்றுவோரே, நீங்கள் சாட்சிகளாக இருந்தும், நம்பிக்கை கொள்ள விரும்புகின்றவர்களை கடவுள்-ன் பாதையி லிருந்து ஏன் விரட்டுகின்றீர்கள், இன்னும் அதனை சீர்குலைக்க நாடுகின்றீர்கள்?” என்று கூறுவீராக. நீங்கள் செய்யும் எந்த ஒன்றையும் கடவுள் ஒரு போதும் அறியாதவரில்லை.