Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 30:22 — ரோமானியர்கள்

வானங்கள் மற்றும் பூமியின் படைப்பும், மேலும் உங்களுடைய மொழிகளிலும் உங்களுடைய நிறங்களிலும் உள்ள வேறுபாடுகளும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். இவற்றில், அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன.

[30:21] நீங்கள் ஒருவரைக் கொண்டு மற்றவர் மன அமைதியும் மற்றும் திருப்தியும் அடைவதற் காக, உங்களிலிருந்தே உங்கள் வாழ்க்கைத் துணைகளை அவர் படைத்திருப்பதும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும், மேலும் உங்கள் இதயங்களில் உங்களுடைய வாழ்க்கைத் துணைகளின் பால் அன்பையும் மேலும் அக்கறையையும் அவர் அமைத்தார். இதில், சிந்திக்கின்ற மக்களுக்குப் போதுமான சான்றுகள் உள்ளன.

[30:23] இரவுப் பொழுதில் அல்லது பகலில் நீங்கள் உறங்குவதும், மேலும் அவருடைய வாழ்வாதாரங்களைத் தேடி நீங்கள் வேலை செய்வதும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். இதில், செவியேற்க இயலும் மக்களுக்குப் போதுமான சான்றுகள் உள்ளன.