குர்ஆன் 30:29 — ரோமானியர்கள்
உண்மையில், வரம்பு மீறியவர்கள் அறிவின்றி, தங்களுடைய சுய அபிப்பிராயங்களைப் பின் பற்றினார்கள். கடவுள்-ஆல் வழி கேட்டிற்கு அனுப்பப்பட்டவர்களைப் பின்னர் எவரால் வழிநடத்த இயலும்? எவரும் எக்காலத்திலும் அவர்களுக்கு உதவ இயலாது.
[30:28] உங்களிலிருந்தே ஓர் உதாரணத்தை அவர் உங்களுக்கு எடுத்துரைக்கின்றார்: நீங்கள் உங்களுடைய ஊழியர்களையோ அல்லது உங்களுக்குக் கீழுள்ளவர்களையோ, அவர்கள் உங்களுக்கே போட்டியாக ஆகும் அளவிற்கு, உங்களுக்குக் கொடுக்கப்படும் அதே அளவு மரியாதையை அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் அளவிற்கு எப்பொழுதாவது உயர்த்து கின்றீர்களா? புரிந்து கொள்கின்ற மக்களுக்கு இந்த வெளிப்பாடுகளை இவ்விதமாக நாம் விவரிக்கின்றோம்.
[30:30] ஆகையால், சரியான ஏகத்துவ மார்க்கத்திற்கு உங்களை நீங்கள் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். கடவுள்-ஆல் மனிதர்களுக்குள் வைக்கப்பட்ட இயற்கை உள்ளுணர்வு இவ்வித மானதே. கடவுள்-ன் இவ்விதமான படைப்பு ஒருபோதும் மாறாது. இதுவே முழுமையான மார்க்கமாகும், ஆனால் பெரும்பாலான மக்கள் அறியமாட்டார்கள்.