Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 30:28 — ரோமானியர்கள்

உங்களிலிருந்தே ஓர் உதாரணத்தை அவர் உங்களுக்கு எடுத்துரைக்கின்றார்: நீங்கள் உங்களுடைய ஊழியர்களையோ அல்லது உங்களுக்குக் கீழுள்ளவர்களையோ, அவர்கள் உங்களுக்கே போட்டியாக ஆகும் அளவிற்கு, உங்களுக்குக் கொடுக்கப்படும் அதே அளவு மரியாதையை அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் அளவிற்கு எப்பொழுதாவது உயர்த்து கின்றீர்களா? புரிந்து கொள்கின்ற மக்களுக்கு இந்த வெளிப்பாடுகளை இவ்விதமாக நாம் விவரிக்கின்றோம்.

[30:27] மேலும் அவர்தான் படைப்பைத் துவக்குபவர், மேலும் அதனை மீண்டும் செய்பவர்; இது அவருக்கு இன்னமும் எளிதானதேயாகும். வானங்கள் மற்றும் பூமியில் உள்ள கம்பீரமான உவமானங்கள் அவருக்குரியது, மேலும் அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[30:29] உண்மையில், வரம்பு மீறியவர்கள் அறிவின்றி, தங்களுடைய சுய அபிப்பிராயங்களைப் பின் பற்றினார்கள். கடவுள்-ஆல் வழி கேட்டிற்கு அனுப்பப்பட்டவர்களைப் பின்னர் எவரால் வழிநடத்த இயலும்? எவரும் எக்காலத்திலும் அவர்களுக்கு உதவ இயலாது.