குர்ஆன் 30:27 — ரோமானியர்கள்
மேலும் அவர்தான் படைப்பைத் துவக்குபவர், மேலும் அதனை மீண்டும் செய்பவர்; இது அவருக்கு இன்னமும் எளிதானதேயாகும். வானங்கள் மற்றும் பூமியில் உள்ள கம்பீரமான உவமானங்கள் அவருக்குரியது, மேலும் அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[30:26] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் அவருக்குரியவர்கள்; அனை வரும் அவருக்கு அடங்கி நடப்பவர்களாகவே இருக்கின்றனர்.
[30:28] உங்களிலிருந்தே ஓர் உதாரணத்தை அவர் உங்களுக்கு எடுத்துரைக்கின்றார்: நீங்கள் உங்களுடைய ஊழியர்களையோ அல்லது உங்களுக்குக் கீழுள்ளவர்களையோ, அவர்கள் உங்களுக்கே போட்டியாக ஆகும் அளவிற்கு, உங்களுக்குக் கொடுக்கப்படும் அதே அளவு மரியாதையை அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் அளவிற்கு எப்பொழுதாவது உயர்த்து கின்றீர்களா? புரிந்து கொள்கின்ற மக்களுக்கு இந்த வெளிப்பாடுகளை இவ்விதமாக நாம் விவரிக்கின்றோம்.