Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 30:31 — ரோமானியர்கள்

நீங்கள் அவருக்கு அடிபணியவும், அவரிடம் பயபக்தியோடிருக்கவும், மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிக்கவும் வேண்டும், மேலும்-நீங்கள் என்ன செய்தாலும்-இணைத்தெய்வ வழிபாட்டிற்குள் மட்டும் எக்காலத்திலும் விழுந்து விடாதீர்கள்.

[30:30] ஆகையால், சரியான ஏகத்துவ மார்க்கத்திற்கு உங்களை நீங்கள் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். கடவுள்-ஆல் மனிதர்களுக்குள் வைக்கப்பட்ட இயற்கை உள்ளுணர்வு இவ்வித மானதே. கடவுள்-ன் இவ்விதமான படைப்பு ஒருபோதும் மாறாது. இதுவே முழுமையான மார்க்கமாகும், ஆனால் பெரும்பாலான மக்கள் அறியமாட்டார்கள்.

[30:32] தங்களுடைய மார்க்கத்தைப் பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டவர்களைப் போல், (இணைத்தெய்வ வழிபாட்டில் விழுந்து விடாதீர்கள்); ஒவ்வொரு பிரிவும் தங்களிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றது.