குர்ஆன் 30:32 — ரோமானியர்கள்
தங்களுடைய மார்க்கத்தைப் பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டவர்களைப் போல், (இணைத்தெய்வ வழிபாட்டில் விழுந்து விடாதீர்கள்); ஒவ்வொரு பிரிவும் தங்களிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றது.
[30:31] நீங்கள் அவருக்கு அடிபணியவும், அவரிடம் பயபக்தியோடிருக்கவும், மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிக்கவும் வேண்டும், மேலும்-நீங்கள் என்ன செய்தாலும்-இணைத்தெய்வ வழிபாட்டிற்குள் மட்டும் எக்காலத்திலும் விழுந்து விடாதீர்கள்.
[30:33] துன்பம் மக்களை வருத்தும் பொழுது, தங்களை முற்றிலும் அவருக்கு அர்ப்பணித்தவர்களாக, அவர்கள் தங்கள் இரட்சகரின் பால் திரும்பு கின்றனர். ஆனால் பின்னர், அவர்கள் மீது அவர் கருணையைக் கொண்டு பொழிந்தவுடன், அவர்களில் சிலர் இணைவழிபாட்டிற்கு மீண்டும் திரும்பி விடுகின்றனர்*.