Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 30:7 — ரோமானியர்கள்

அவர்களால் காணமுடிகின்ற இவ்வுலக விஷயங்களைப் பற்றி மட்டுமே அவர்கள் அக்கறை கொள்கின்றார்கள், அதே சமயம் மறுவுலகின்பால் முற்றிலும் அலட்சியமாக இருக்கின்றார்கள்.

[30:6] கடவுள்-ன் வாக்குறுதி இவ்விதமானதாகும்-மேலும் கடவுள் ஒருபோதும் தன் வாக்குறுதி யை முறிப்பதில்லை-ஆனால், மனிதர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.

[30:8] அவர்கள் ஏன் தங்களைப் பற்றியே சிந்தித்துப் பார்க்கவில்லை? மேலும் வானங்களையும் மற்றும் பூமியையும் இன்னும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றையும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும், மேலும் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தவணைக்காகவுமே தவிர, கடவுள் படைக்கவில்லை. எப்படியிருப் பினும், அதிகமான மக்கள், தங்களுடைய இரட்சகரைச் சந்திப்பதைக் குறித்து, நம்ப மறுப்பவர்களாக உள்ளனர்.