Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 31:34 — லுக்மான்

அந்த நேரம் (உலக முடிவு)* பற்றிய அறிவு கடவுள்-இடமே உள்ளது. அவர்தான் மழையை இறக்கி அனுப்புகின்றவர், மேலும் கர்ப்பத்தில் உள்ளவற்றையும் அவர் அறிந்திருக்கின்றார். எந்த ஆன்மாவும் நாளை அதற்கு என்ன நிகழும் என்பதை அறியாது, மேலும் எந்த இடத்தில் அவனுக்கு அல்லது அவளுக்கு மரணம் நேரிடும் என்பதையும் எவர் ஒருவரும் அறியமாட்டார். கடவுள் எல்லாம் அறிந்தவர், நன்கறிந்தவர்.

[31:33] மனிதர்களே, நீங்கள் உங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடிருக்கவும், மேலும் ஒரு தந்தை தன் சொந்தப் பிள்ளைக்கு உதவ முடியாத, அன்றி ஒரு பிள்ளை தன் தந்தைக்கு உதவ முடியாத அந்நாளுக்கு அஞ்சிக் கொள்ளவும் வேண்டும். நிச்சயமாகக், கடவுள்-ன் வாக்குறுதி சத்தியமான தாகும். ஆகையால், இந்த வாழ்க்கையினால் கவனம் திருப்பப் பட்டவராகி விடாதீர்கள்; வெற்று மாயைகளால் கடவுள்-இடமிருந்து கவனத்தைத் திருப்பி விடாதீர்கள்.