குர்ஆன் 31:33 — லுக்மான்
மனிதர்களே, நீங்கள் உங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடிருக்கவும், மேலும் ஒரு தந்தை தன் சொந்தப் பிள்ளைக்கு உதவ முடியாத, அன்றி ஒரு பிள்ளை தன் தந்தைக்கு உதவ முடியாத அந்நாளுக்கு அஞ்சிக் கொள்ளவும் வேண்டும். நிச்சயமாகக், கடவுள்-ன் வாக்குறுதி சத்தியமான தாகும். ஆகையால், இந்த வாழ்க்கையினால் கவனம் திருப்பப் பட்டவராகி விடாதீர்கள்; வெற்று மாயைகளால் கடவுள்-இடமிருந்து கவனத்தைத் திருப்பி விடாதீர்கள்.
[31:32] உக்கிரமான அலைகள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் பொழுது, தங்களுடைய பிரார்த் தனைகளை உண்மையாக அவருக்கு மட்டுமே அர்ப்பணித்தவர்களாக, அவர்கள் கடவுள்-ஐ இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றனர். ஆனால் அவர்களைக் காப்பாற்றி அவர் கரை சேர்த்த வுடன், அவர்களில் சிலர் பழைய நிலைக்கு திரும்பிச் சென்று விடுகின்றனர். நம்பிக்கைத் துரோகிகளாகவும், நன்றிகெட்டவர்களாகவும் இருப்பவர்களைத் தவிர எவரும் நம்முடைய வெளிப்பாடுகளைக் கைவிட்டு விடமாட்டார்கள்.
[31:34] அந்த நேரம் (உலக முடிவு)* பற்றிய அறிவு கடவுள்-இடமே உள்ளது. அவர்தான் மழையை இறக்கி அனுப்புகின்றவர், மேலும் கர்ப்பத்தில் உள்ளவற்றையும் அவர் அறிந்திருக்கின்றார். எந்த ஆன்மாவும் நாளை அதற்கு என்ன நிகழும் என்பதை அறியாது, மேலும் எந்த இடத்தில் அவனுக்கு அல்லது அவளுக்கு மரணம் நேரிடும் என்பதையும் எவர் ஒருவரும் அறியமாட்டார். கடவுள் எல்லாம் அறிந்தவர், நன்கறிந்தவர்.