குர்ஆன் 31:32 — லுக்மான்
உக்கிரமான அலைகள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் பொழுது, தங்களுடைய பிரார்த் தனைகளை உண்மையாக அவருக்கு மட்டுமே அர்ப்பணித்தவர்களாக, அவர்கள் கடவுள்-ஐ இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றனர். ஆனால் அவர்களைக் காப்பாற்றி அவர் கரை சேர்த்த வுடன், அவர்களில் சிலர் பழைய நிலைக்கு திரும்பிச் சென்று விடுகின்றனர். நம்பிக்கைத் துரோகிகளாகவும், நன்றிகெட்டவர்களாகவும் இருப்பவர்களைத் தவிர எவரும் நம்முடைய வெளிப்பாடுகளைக் கைவிட்டு விடமாட்டார்கள்.
[31:31] அவருடைய சான்றுகளில் சிலவற்றை உங்களுக்குக் காட்டுவதற்காக, கடவுள்-ன் வாழ்வாதாரங்களைச் சுமந்து கொண்டு, கப்பல்கள் கடலில் சுற்றித் திரிவதை நீங்கள் பார்க்க வில்லையா? உண்மையில், உறுதிப்பாடும், நன்றியும் உடைய ஒவ்வொருவருக்கும் இவை போதிய சான்றுகளாக இருக்க வேண்டும்.
[31:33] மனிதர்களே, நீங்கள் உங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடிருக்கவும், மேலும் ஒரு தந்தை தன் சொந்தப் பிள்ளைக்கு உதவ முடியாத, அன்றி ஒரு பிள்ளை தன் தந்தைக்கு உதவ முடியாத அந்நாளுக்கு அஞ்சிக் கொள்ளவும் வேண்டும். நிச்சயமாகக், கடவுள்-ன் வாக்குறுதி சத்தியமான தாகும். ஆகையால், இந்த வாழ்க்கையினால் கவனம் திருப்பப் பட்டவராகி விடாதீர்கள்; வெற்று மாயைகளால் கடவுள்-இடமிருந்து கவனத்தைத் திருப்பி விடாதீர்கள்.