குர்ஆன் 33:27 — அணியினர்
அவர்களுடைய நிலங்களுக்கும், அவர் களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பணத்திற்கும், மேலும் நீங்கள் ஒருபோதும் மிதித்திராத நிலங்களுக்கும் நீங்கள் வாரிசாகும்படி அவர் செய்தார். கடவுள் எல்லா விஷயங்களையும் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்து உள்ளார்.
[33:26] அத்துடன் வேதத்தையுடைய மக்களில் உள்ள அவர்களுடைய கூட்டாளிகளை, அவர் களுடைய பாதுகாப்பான நிலைகளிலிருந்து அவர் கீழே கொண்டு வந்தார், மேலும் அவர்களுடைய இதயங்களுக்குள் திகிலை எறிந்தார். அவர்களில் சிலரை நீங்கள் கொன்றீர்கள், மேலும் சிலரைச் சிறைப் பிடித்தீர்கள்.
[33:28] வேதம் வழங்கப்பட்டவரே, உம் மனைவியரிடம் கூறுவீராக “இந்த உலகத்தையும் மேலும் அதன் ஆடம்பரங்களையும் தேடுபவர்களாக நீங்கள் இருந்தால், பின்னர் நான் உங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கி, இணக்கமான முறையில் சென்றுவிட உங்களை அனுமதிக்கின்றேன்.