குர்ஆன் 33:26 — அணியினர்
அத்துடன் வேதத்தையுடைய மக்களில் உள்ள அவர்களுடைய கூட்டாளிகளை, அவர் களுடைய பாதுகாப்பான நிலைகளிலிருந்து அவர் கீழே கொண்டு வந்தார், மேலும் அவர்களுடைய இதயங்களுக்குள் திகிலை எறிந்தார். அவர்களில் சிலரை நீங்கள் கொன்றீர்கள், மேலும் சிலரைச் சிறைப் பிடித்தீர்கள்.
[33:25] நம்ப மறுப்பவர்களை அவர்களுடைய கோபத் துடன் கடவுள் திருப்பி விரட்டினார், மேலும் அவர்கள் வெறுங்கையுடன் சென்றனர். கடவுள் இவ்விதமாக எந்தச் சண்டையிலிருந்தும் நம்பிக்கையாளர்களைக் காப்பாற்றிவிட்டார். கடவுள் சக்தி மிக்கவர், சர்வ வல்லமையுடையவர்.
[33:27] அவர்களுடைய நிலங்களுக்கும், அவர் களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பணத்திற்கும், மேலும் நீங்கள் ஒருபோதும் மிதித்திராத நிலங்களுக்கும் நீங்கள் வாரிசாகும்படி அவர் செய்தார். கடவுள் எல்லா விஷயங்களையும் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்து உள்ளார்.