குர்ஆன் 33:25 — அணியினர்
நம்ப மறுப்பவர்களை அவர்களுடைய கோபத் துடன் கடவுள் திருப்பி விரட்டினார், மேலும் அவர்கள் வெறுங்கையுடன் சென்றனர். கடவுள் இவ்விதமாக எந்தச் சண்டையிலிருந்தும் நம்பிக்கையாளர்களைக் காப்பாற்றிவிட்டார். கடவுள் சக்தி மிக்கவர், சர்வ வல்லமையுடையவர்.
[33:24] அவர்களுடைய உண்மைத்தன்மைக்காக உண்மையாளர்களுக்கு கடவுள் நிச்சயமாகப் பிரதிபலனளிப்பார், மேலும் நயவஞ்சகர்களைத் தண்டிப்பார், அவ்வாறு அவர் நாடினால், அல்லது அவர்களை மீட்டுக் கொள்வார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்
[33:26] அத்துடன் வேதத்தையுடைய மக்களில் உள்ள அவர்களுடைய கூட்டாளிகளை, அவர் களுடைய பாதுகாப்பான நிலைகளிலிருந்து அவர் கீழே கொண்டு வந்தார், மேலும் அவர்களுடைய இதயங்களுக்குள் திகிலை எறிந்தார். அவர்களில் சிலரை நீங்கள் கொன்றீர்கள், மேலும் சிலரைச் சிறைப் பிடித்தீர்கள்.