Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:34 — அணியினர்

உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்ற கடவுள்-ன் வெளிப்பாடுகளையும் மேலும் அவற்றுள் இரண்டறக்கலந்துள்ள ஞானத் தையும் நினைவில் கொள்ளுங்கள். கடவுள் கம்பீரமானவர், நன்கறிந்தவர்.

[33:33] நீங்கள் உங்களுடைய வீடுகளில் தங்கியிருக்க வேண்டும், மேலும் பழைய அறியாமை நாட்களில் நீங்கள் செய்து கொண்டிருந்ததைப் போல், மக்களுடன் அளவிற்கதிகமாகக் கலக்காதீர்கள். நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும், மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்கவும், மேலும் கடவுள் மற்றும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படியவும் வேண்டும். புனித ஆலயத்தைச் சுற்றி வசிப்பவர்களே, கடவுள் உங்களிடமிருந்து அனைத்துத் தீமைகளையும் நீக்கவும், மேலும் உங்களை முழுமையாகத் தூய்மைப் படுத்தவுமே விரும்புகின்றார்.

[33:35] அடிபணிந்த ஆண்கள், அடிபணிந்த பெண்கள், நம்பிக்கை கொண்ட ஆண்கள், நம்பிக்கை கொண்ட பெண்கள், கீழ்ப்படிகின்ற ஆண்கள், கீழ்ப்படிகின்ற பெண்கள், உண்மையாளர் களான ஆண்கள், உண்மையாளர்களான பெண்கள், உறுதிப்பாடுடைய ஆண்கள், உறுதிப்பாடுடைய பெண்கள், பயபக்தியுடைய ஆண்கள், பயபக்தியுடைய பெண்கள், தர்ம சிந்தனையுள்ள ஆண்கள், தர்மசிந்தனையுள்ள பெண்கள், நோன்பு நோற்கும் ஆண்கள், நோன்பு நோற்கும் பெண்கள், கற்புடைய ஆண்கள், கற்புடைய பெண்கள், மேலும் கடவுள்-ஐ அடிக்கடி நினைவு கூர்கின்ற ஆண்கள் மற்றும் அடிக்கடி நினைவுகூர்கின்ற பெண்கள்; கடவுள் அவர்களுக்காக மன்னிப் பையும் மகத்தானதொரு பிரதிபலனையும் தயார் செய்துள்ளார்.