Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:35 — அணியினர்

அடிபணிந்த ஆண்கள், அடிபணிந்த பெண்கள், நம்பிக்கை கொண்ட ஆண்கள், நம்பிக்கை கொண்ட பெண்கள், கீழ்ப்படிகின்ற ஆண்கள், கீழ்ப்படிகின்ற பெண்கள், உண்மையாளர் களான ஆண்கள், உண்மையாளர்களான பெண்கள், உறுதிப்பாடுடைய ஆண்கள், உறுதிப்பாடுடைய பெண்கள், பயபக்தியுடைய ஆண்கள், பயபக்தியுடைய பெண்கள், தர்ம சிந்தனையுள்ள ஆண்கள், தர்மசிந்தனையுள்ள பெண்கள், நோன்பு நோற்கும் ஆண்கள், நோன்பு நோற்கும் பெண்கள், கற்புடைய ஆண்கள், கற்புடைய பெண்கள், மேலும் கடவுள்-ஐ அடிக்கடி நினைவு கூர்கின்ற ஆண்கள் மற்றும் அடிக்கடி நினைவுகூர்கின்ற பெண்கள்; கடவுள் அவர்களுக்காக மன்னிப் பையும் மகத்தானதொரு பிரதிபலனையும் தயார் செய்துள்ளார்.

[33:34] உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்ற கடவுள்-ன் வெளிப்பாடுகளையும் மேலும் அவற்றுள் இரண்டறக்கலந்துள்ள ஞானத் தையும் நினைவில் கொள்ளுங்கள். கடவுள் கம்பீரமானவர், நன்கறிந்தவர்.

[33:36] கடவுள்-ம் அவருடைய தூதரும் ஏதேனும் கட்டளையைப் பிறப்பித்து விட்டால், நம்பிக்கை கொண்ட ஆணிற்கோ அல்லது நம்பிக்கை கொண்ட பெண்ணிற்கோ, அந்தக் கட்டளை குறித்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு எதுவும் கிடையாது. கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படியாத எவர் ஒருவரும் வெகு தூரம் வழிகேட்டில் சென்று விட்டார்.