குர்ஆன் 33:73 — அணியினர்
ஏனெனில் நயவஞ்சக ஆண்களையும் மற்றும் நயவஞ்சகப் பெண்களையும், மேலும் இணைத் தெய்வ வழிபாடு செய்கின்ற ஆண்களையும் மற்றும் இணைத்தெய்வ வழிபாடு செய்கின்ற பெண்களையும், கடவுள் தவிர்த்து விட முடியாதவாறு தண்டிப்பார். நம்பிக்கை கொண்ட ஆண்களையும் மற்றும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் கடவுள் மீட்டுக் கொள் கின்றார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[33:72] வானங்களுக்கும், பூமிக்கும், மற்றும் மலை களுக்கும் (தேர்ந்தெடுக்கும் சுதந்திரமெனும்) பொறுப்பை, நாம் முன்வைத்தோம், ஆனால் அவை அதனைச் சுமந்து கொள்ள மறுத்தன, மேலும் அதனைக் குறித்து அஞ்சியவை களாகவும் இருந்தன. ஆனால் மனிதன் அதனை ஏற்றுக் கொண்டான். அவன் வரம்புமீறுகின்றவனாகவும், அறிவில்லாதவனாகவும் இருந்தான்.*