Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 34:20 — ஷீபா

சாத்தான், அவனுடைய எதிர்பார்ப்புகளை உடனடியாகப் பூர்த்தி செய்பவர்களாக அவர்களைக் கண்டான். அவர்கள் அவனைப் பின்பற்றினர், ஒரு சில நம்பிக்கையாளர்களைத் தவிர.

[34:19] ஆனால் அவர்கள் (நன்றி கெட்டவர்களாக மாறினார்கள், மேலும்): “எங்கள் இரட்சகரே, (நிறுத்தங்கள் எதுவுமின்றி) எங்கள் பயணங்களின் தூரத்தை நீர் அதிகரித்தாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்” என்று சவால் விட்டார்கள். இவ்விதமாக அவர்கள் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே அநீதி இழைத்துக் கொண்டனர். அதன் விளைவாக, அவர்களை நாம் சரித்திரமாக ஆக்கினோம், மேலும் பூமி எங்கிலும் சிறுசிறு சமூகங்களாக அவர்களை நாம் சிதறடித்தோம். உறுதியுடையவர்களாகவும், மேலும் நன்றியுடையவர்களாகவும் இருப்பவர்களுக்கு இது ஒரு படிப்பினையை வழங்க வேண்டும்.

[34:21] அவர்கள் மீது அவனுக்கு எந்த அதிகாரமும் ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் இவ்விதமாக மறுவுலகின் மீது நம்பிக்கை கொண்டிருப் பவர்களை, அதனைப்* பற்றி சந்தேகம் கொண்டிருப் பவர்களிலிருந்து நாம் வேறுபடுத்திக் காட்டுகின் றோம். உம் இரட்சகர் அனைத்துப் பொருட் களையும் முழு கட்டுப்பாட்டில் வைத்து உள்ளார்.