குர்ஆன் 35:1 — துவக்குபவர்
புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது, வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவர், மேலும் சிறகுகள்- இரண்டு, மூன்று, மற்றும் நான்கு (சிறகுகள்) கொண்ட தூதர்களாக வானவர்களை நியமிப்பவர். அவர் நாடுகின்றவாறு படைப்புகளை அவர் அதிகரிக்கின்றார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.
[35:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[35:2] மக்கள் மீது கடவுள் அருளைக்கொண்டு பொழியும் பொழுது, எந்தச் சக்தியும் அதனைத் தடுத்திட முடியாது. மேலும் அவர் அதனைத் தடுத்து நிறுத்திக் கொண்டால், எந்தச் சக்தியும், அவரைத் தவிர, அதனை அனுப்ப முடியாது, அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.