Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 35:2 — துவக்குபவர்

மக்கள் மீது கடவுள் அருளைக்கொண்டு பொழியும் பொழுது, எந்தச் சக்தியும் அதனைத் தடுத்திட முடியாது. மேலும் அவர் அதனைத் தடுத்து நிறுத்திக் கொண்டால், எந்தச் சக்தியும், அவரைத் தவிர, அதனை அனுப்ப முடியாது, அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[35:1] புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது, வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவர், மேலும் சிறகுகள்- இரண்டு, மூன்று, மற்றும் நான்கு (சிறகுகள்) கொண்ட தூதர்களாக வானவர்களை நியமிப்பவர். அவர் நாடுகின்றவாறு படைப்புகளை அவர் அதிகரிக்கின்றார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.

[35:3] மனிதர்களே, உங்கள் மீதான கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவில் கொள்ளுங்கள். கடவுள்-ஐ விடுத்து வானங்களிலும் மற்றும் பூமியிலுமிருந்து உங்களுக்கு வழங்குகின்ற படைப்பாளர் எவரும் இருக்கின்றாரா? அவருடன் வேறு தெய்வம் இல்லை, எவ்வாறு நீங்கள் வழி தவறிச் செல்ல இயலும்?