குர்ஆன் 35:3 — துவக்குபவர்
மனிதர்களே, உங்கள் மீதான கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவில் கொள்ளுங்கள். கடவுள்-ஐ விடுத்து வானங்களிலும் மற்றும் பூமியிலுமிருந்து உங்களுக்கு வழங்குகின்ற படைப்பாளர் எவரும் இருக்கின்றாரா? அவருடன் வேறு தெய்வம் இல்லை, எவ்வாறு நீங்கள் வழி தவறிச் செல்ல இயலும்?
[35:2] மக்கள் மீது கடவுள் அருளைக்கொண்டு பொழியும் பொழுது, எந்தச் சக்தியும் அதனைத் தடுத்திட முடியாது. மேலும் அவர் அதனைத் தடுத்து நிறுத்திக் கொண்டால், எந்தச் சக்தியும், அவரைத் தவிர, அதனை அனுப்ப முடியாது, அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[35:4] அவர்கள் உம்மை நம்பமறுத்தால், உமக்கு முன்னிருந்த தூதர்களும், நம்ப மறுக்கப் பட்டுள்ளனர். கடவுள் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.