Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 35:40 — துவக்குபவர்

“கடவுள்-உடன் நீங்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; பூமியின் மீது அவர்கள் எதனைப் படைத் திருக்கின்றனர் என்று எனக்குக் காட்டுங்கள்” என்று கூறுவீராக. வானங்களில் ஏதேனும் பங்குரி மையை அவர்கள் சொந்தமாகக் கொண்டிருக் கின்றனரா? அதில் சந்தேகம் எதுவும் இல்லாத ஒரு புத்தகத்தை நாம் அவர்களுக்குத் தந்திருக் கின்றோமா? உண்மையில், வரம்பு மீறுபவர்கள் ஒருவர் மற்றவருக்கு அளிக்கும் வாக்குறுதி ஒரு மாயை என்பதை விட அதிகம் எதுவுமில்லை.

[35:39] அவர்தான் பூமியின் வாரிசுகளாக உங்களை ஆக்கியவர். அதனைத் தொடர்ந்து, நம்ப மறுப்பதைத் தேர்ந்தெடுக்கும் எவராயினும் தனக்கே கேடாகத்தான் அவ்வாறு செய்கின்றார். நம்பமறுப்பவர்களுடைய நம்பிக்கையின்மை அவர்கள் பால் அவர்களுடைய இரட்சகரின் வெறுப்பை மட்டுமே அதிகரிக்கின்றது. நம்ப மறுப்பவர்களுடைய நம்பிக்கையின்மை நஷ்டத் திற்குள் அவர்களை ஆழமாக ஆழ்த்தி விடுகின்றது.

[35:41] கடவுள் தான் வானங்கள் மற்றும் பூமியை, அவை மறைந்திடாதவாறு பிடித்துக் கொண்டிருப்பவர். வேறு எவரேனும் ஒருவர் அவற்றைப் பிடிப்பதாக இருந்தால், மிகவும் உறுதியாக அவை மறைந்து போய்விடும். அவர் கனிவானவர், மன்னிப்பவர்.